உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அஞ்சு பாபி ஜார்ஜ்.
2003-ல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியத் தடகள சம்மேளனத்தில் துணைத் தலைவராக உள்ளார் அஞ்சு பாபி ஜார்ஜ். தன்னுடைய அகாதெமி மூலமாக பல இளம் வீரர், வீராங்கனைகளின் திறமையை மெருகேற்றி, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார்.
உலகத் தடகள அமைப்பு, அஞ்சு பாபி ஜார்ஜின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2021-ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக அவரைத் தேர்வு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.