மே.இ. தீவுகள் அணி (கோப்புப் படம்) 
செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன்

காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியதால் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 அணிகளுக்கு...

DIN

காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியதால் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. டி20 தொடர் டிசம்பர் 13-ல் ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியுள்ளார். இதையடுத்து ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மே.இ. தீவுகள் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப்பும் டி20 அணிக்கு நிகோல்ஸ் பூரனும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப் முதல்முறையாக ஒருநாள் கேப்டனாகச் செயல்படவுள்ளார். பூரன் தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 4-1 எனத் தொடரை வென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT