செய்திகள்

முதல் கிரிக்கெட் வீரர்: விராட் கோலியின் புதிய சாதனை

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

DIN

சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வகைப் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 97 டெஸ்டுகள், 254 ஒருநாள், 95 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்றதில்லை. மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று 50-வது வெற்றியில் பங்களித்துள்ளார் விராட் கோலி. இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளைக் கண்ட முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனை வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடையாது.

விராட் கோலி

டெஸ்டுகள்: ஆட்டங்கள் - 97, வெற்றிகள் - 50
ஒருநாள்: ஆட்டங்கள் - 254, வெற்றிகள் - 153
டி20: ஆட்டங்கள் - 95, வெற்றிகள் - 59

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT