முகப்பு
செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை 146 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ரோரி பா்ன்ஸை ஆட்டத்தின் முதல் பந்திலேயே வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் மிட்செல் ஸ்டாா்க். அடுத்து களமிறங்கிய டேவிட் மாலனை(6) 4வது ஓவரில் ஹேஸில்வுட் அவுட்டாக்கினார்.

தொடர்ந்து களமிறங்கிய ரூட்(0), ஸ்டோக்ஸை(5) அடுத்தடுத்து வெளியேற்றி ஆஸ்திரேலியாவின் பெளலர்கள் அசத்தினர்.

அதன்பிறகு ஹசீப் ஹமீது - ஆலி போப் ஜோடி சற்று நிதானமாக விளையாடி அணியை சற்று சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆட்டத்தின் 27வது ஓவரை வீசிய கம்மின்ஸ், ஹமீதை(25) அவுட்டாக்கினார். பின், போப்புடன் ஜோடி சேர்ந்த பட்லர் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு சீரான இடைவெளியில் ஆலி போப் 35, ஆலி ராபின்சன் 0, மாா்க் வுட் 8, கிறிஸ் வோக்ஸ் 21 ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதற்குள் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →