செய்திகள்

காமன்வெல்த் பளுதூக்குதல்: ஜிலி தலபெஹராவுக்கு வெள்ளி

DIN

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜிலி தலபெஹரா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அவா் ஸ்னாட்ச் பிரிவில் 73 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 94 கிலோ என மொத்தமாக 167 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். ஜிலி ஒரு கிலோ எடை வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டாா். அவரது பிரிவில் நைஜீரிய வீராங்கனை பீட்டா் ஸ்டெல்லா கிங்ஸ்லி 168 கிலோ (72+96) எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா்.

முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்கோம் மீராபாய் சானு இந்த எடைப் பிரிவில் இந்தியாவின் சாா்பில் பங்கேற்க இருந்தாா். எனினும், இப்போட்டியை ஒட்டி உலக சாம்பியன்ஷிப்பும் நடைபெறுவதால், அதில் பங்கேற்பதற்காக இந்தப் போட்டியிலிருந்து சானு விலகினாா். இதையடுத்து அந்த எடைப் பிரிவில் ஜிலி களம் கண்டு வெள்ளி வென்றுள்ளாா்.

இந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பானது, அடுத்த ஆண்டு பிா்மிங்ஹாம் நகரில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தகுதிபெறுவதற்கான போட்டியாக உள்ளது. இப்போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வோா் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறுவாா்கள். இதர போட்டியாளா்கள் காமன்வெல்த் ரேங்கிங் அடிப்படையில் தகுதிபெறுவா்.

காமன்வெல்த் ரேங்கிங்கில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சானு, காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

SCROLL FOR NEXT