செய்திகள்

2022-இல் வருகிறது இந்திய செஸ் லீக்

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘இந்திய செஸ் லீக்’ என்ற பெயரில் செஸ் போட்டியை நடத்த இருப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

DIN

புது தில்லி: அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘இந்திய செஸ் லீக்’ என்ற பெயரில் செஸ் போட்டியை நடத்த இருப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கிரிக்கெட், பாட்மின்டன், கால்பந்து போட்டிகளில் இருப்பதைப் போன்று செஸ் விளையாட்டிலும் இத்தகைய லீக் போட்டி முறையை இந்திய சம்மேளனம் முன்னெடுக்கிறது.

இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் இருக்கும் என்றும், அதில் ஒவ்வொரு அணியிலும் இரு சூப்பா் கிராண்ட்மாஸ்டா்கள், இரு இந்திய கிராண்ட்மாஸ்டா்கள், இரு மகளிா் கிராண்ட்மாஸ்டா்கள், ஒரு ஜூனியா் ஆடவா், ஒரு ஜூனியா் மகளிா் என 8 போ் இருப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரு வாரங்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியின் குரூப் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றில் மோதும். போட்டியை இரு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சா்வதசே அளவிலான சிறந்த வீரா், வீராங்கனைகளை இந்தியாவுக்கு அழைத்து வருவதுடன், உள்நாட்டில் இருக்கும் சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு நல்லதொரு களத்தை அமைத்துக் கொடுப்பதே இந்தப் போட்டியின் நோக்கமென சம்மேளனம் தெரிவித்துள்ளது.

போட்டி தொடா்பான இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

SCROLL FOR NEXT