படம்: ட்விட்டர் | பிசிசிஐ 
செய்திகள்

தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தது இந்திய அணி

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வியாழக்கிழமை தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தது.

DIN


3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வியாழக்கிழமை தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தது.

தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி மும்பையில் மூன்று நாள்கள் தனிமையில் இருந்தது. பின்னர் மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) தென் ஆப்பிரிக்கா புறப்பட்டது இந்திய அணி. 

தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றடைந்துவிட்டதாக பிசிசிஐ புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால், மும்பையில் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார். அவருக்குப் பதில் மாற்று வீரராக பிரியங்க் பஞ்சால் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், சேத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜாஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

SCROLL FOR NEXT