லபுஷேன் 
செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்துக்கு முதல்முறையாக முன்னேறிய ஆஸி. வீரர்

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

DIN

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஷஸ் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் பேட்டர் லபுஷேன், முதல் டெஸ்டில் 74 ரன்களும் 2-வது டெஸ்டில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தார்.

இதையடுத்து ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் லபுஷேன்.  912 புள்ளிகளுடன் லபுஷேனும் 897 புள்ளிகளுடன் ஜோ ரூட்டும் முதல் இரு இடங்களிலும் ஸ்மித், கேன் வில்லியம்சன், ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளார்கள். ஆஷஸ் தொடர் ஆரம்பிக்கும் முன்பு, லபுஷேன் 4-ம் இடத்தில் இருந்தார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களில் சரியாக விளையாடாததால் முதல் இடத்தைப் பறிகொடுத்த பாகிஸ்தானின் பாபர் ஆஸம், கடைசி டி20 ஆட்டத்தில் நன்கு விளையாடியதால் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளார். பாபரும் இங்கிலாந்தின் மலானும் ஒன்றாக முதல் இடத்தில் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT