பும்ரா 
செய்திகள்

செஞ்சுரியனில் கொளுத்தும் வெயில்: மழைக்கு முன்பு வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்டின் கடைசி நாளன்று மழை பாதிப்பின்றி ஆட்டம் தொடங்கியுள்ளது.

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்டின் கடைசி நாளன்று மழை பாதிப்பின்றி ஆட்டம் தொடங்கியுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தெ.ஆ. அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் தெ.ஆ. அணி, 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

5-ம் நாளான இன்று மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் பதற்றமானார்கள். எனினும் இன்றைய ஆட்டம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது. மைதானத்தில் வெயில் கொளுத்துவதால் அடுத்த மூன்று, நான்கு மணி நேரத்துக்குப் பிரச்னை எதுவும் வராது எனத் தெரிகிறது. மதியம் 3 மணிக்குப் பிறகுதான் மழை வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தேநீர் இடைவேளைக்கு முன்பு மீதமுள்ள ஆறு தெ.ஆ. விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிக் கனியைப் பறிக்குமா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT