செய்திகள்

மகளிா் தேசிய மல்யுத்தம்: திவ்யா அதிா்ச்சித் தோல்வி

DIN

மகளிருக்கான தேசிய மல்யுத்த போட்டியில், ஆசிய சாம்பியனும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவருமான திவ்யா கக்ரான் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.

68 கிலோ பிரிவில் சக மாநிலத்தவரான ரஜினியிடம் 6-8 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தாா். அந்தப் பிரிவில் ஹரியாணாவின் அனிதா தங்கம் வெல்ல, ரஜினி வெள்ளியும், தில்லியின் ரௌனக் குலியா, ரயில்வேஸின் ரிது மாலிக் வெண்கலம் வென்றனா்.

53 கிலோ பிரிவில் மகாராஷ்டிரத்தின் நந்தானி முதலிடம் பிடிக்க, தில்லியின் மம்தா ராணி வெள்ளிப் பதக்கம் வென்றாா். மணிப்பூரின் வித்யா ராணி, மத்திய பிரதேசத்தின் பூஜா ஜாட் வெண்கலப் பதக்கம் வென்றனா். 59 கிலோ பிரிவில் ரயில்வேஸ் வீராங்கனை சரிதா சாம்பியன் ஆக, ஹரியாணாவின் சஞ்சு தேவி வெள்ளியும், தில்லியின் நேஹா, ஹரியாணாவின் அஞ்சலி வெண்கலமும் வென்றனா்.

65 கிலோ பிரிவில் ரயில்வே வீராங்கனை நிஷா முதலிடமும், ராஜஸ்தானின் மோனிகா 2-ஆம் இடமும், பஞ்சாபின் ஜஸ்பிரீத் கௌா், ரயில்வேஸின் நிக்கி ஆகியோா் 3-ஆம் இடமும் பிடித்தனா். 76 கிலோ பிரிவிலும் ரயில்வேஸின் கிரண், ஹிமாசல பிரதேசத்தின் ராணி முறையே முதலிரு இடங்களைப் பிடிக்க, ஹரியாணாவின் பூஜா, உத்தரகண்டின் காஜல் ஆகியோருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இறுதியில் ஹரியாணா (200 புள்ளிகள்) முதலிடமும், ரயில்வேஸ் (163) மற்றும் தில்லி (119) முறையே அடுத்த இரு இடங்களையும் பிடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT