செய்திகள்

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் அசோக் டிண்டா

இந்திய வேகப்பந்து வீச்சாளர்  அசோக் டிண்டா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

DIN

இந்திய வேகப்பந்து வீச்சாளர்  அசோக் டிண்டா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 13 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2013 ஜனவரியில் சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்.

கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சையத் முஷ்டாக் போட்டியின் கடைசி இரு ஆட்டங்களில் கோவாவுக்காக விளையாடவில்லை. காயம் வீங்கியிருப்பதால் என்னால் ஓட முடியாத நிலை. எனக்கு 37 வயதாகிவிட்டது. வேகப்பந்துவீச்சாளருக்கு இதுவே அதிகம். என்னுடைய உடல் தொடர்ந்து விளையாட அனுமதிப்பதில்லை. ஓய்வு பெற இதுவே காரணம் என டிண்டா பேட்டியளித்துள்ளார்.

116 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 420 விக்கெட்டுகளையும் 98 உள்ளூர் ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 151 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் தில்லி, புணே, கொல்கத்தா, பெங்களூர் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT