அக்‌ஷர் படேல் (நடுவில்) 
செய்திகள்

முதல் டெஸ்டிலிருந்து அக்‌ஷர் படேல் விலகல்: இந்திய அணியில் இரு வீரர்கள் சேர்ப்பு!

இதனால் ஷாபாஸ் நதீம், ராகுல் சஹார் ஆகிய இருவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்டிலிருந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல், முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஷாபாஸ் நதீம், ராகுல் சஹார் ஆகிய இருவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

117 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷாபாஸ் நதீம், சென்னை டெஸ்டில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT