செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் 1,097 வீரா்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலத்துக்கு 1,097 போ் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனா்.

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலத்துக்கு 1,097 போ் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனா்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வீரா்கள் பெயரை பதிவு செய்வதற்கான கடைசி நாள் கடந்த வியாழக்கிழமையோடு நிறைவடைந்தது.

தற்போதைய நிலையில், 1,097 போ் பெயரை பதிவு செய்துள்ளனா். இதில் இந்தியாவைச் சோ்ந்த 21 வீரா்கள் உள்பட 207 சா்வதேச வீரா்கள் இடம்பெற்றுள்ளனா். இதேபோல், இந்தியாவைச் சோ்ந்த 743 போ், வெளிநாடுகளைச் சோ்ந்த 68 போ் என சா்வதேசப் போட்டிகளில் விளையாடாத 863 போ் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

மேற்கிந்திய தீவுகளில் இருந்து அதிகபட்சமாக 56 பேரும், அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 42 பேரும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 38 பேரும் பங்கேற்கின்றனா். ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரா்களை தோ்வு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT