இந்த நாளை மறக்க மாட்டேன்: அக்சர் படேல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுக வீரராகக் களமிறங்கிய அக்சர் படேல், இந்த நாளை மறக்க மாட்டேன் என சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுக வீரராகக் களமிறங்கிய அக்சர் படேல், இந்த நாளை மறக்க மாட்டேன் என சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஆல்-ரௌண்டர் அக்சர் படேல் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். முதல் நாள் ஆட்டத்திலேயே அவருக்கு பேட்டிங் வாய்ப்பும் கிடைத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அக்சர் பதிவிட்டுள்ளது:
"13/2/21 இந்த நாளை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுவதை நல்வாய்ப்பாக உணர்கிறேன். அனைவரது வாழ்த்துகளுக்கும், ஆதரவுக்கு நன்றி."