முகப்பு
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நமன் ஓஜா ஓய்வு

​சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா திங்கள்கிழமை அறிவித்தார்.

Updated On : 15 பிப்ரவரி, 2021 at 9:49 PM
பகிர்:


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா திங்கள்கிழமை அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் பிசிசிஐ நடத்தும் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர், உலகளாவிய டி20 மற்றும் டி10 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2010-இல் முதன்முதலாக இந்திய அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார். 2015-இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார் ஓஜா.

Advertisement

இவர் ரஞ்சிக் கோப்பையில் 7,861 ரன்கள் குவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.