செய்திகள்

மீண்டும் ‘விவோ’

DIN


ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசனுக்கான பிரதான விளம்பரதாரா் (டைட்டில் ஸ்பான்சா்) அந்தஸ்தை செல்லிடப்பேசி நிறுவனமான ‘விவோ’ மீண்டும் பெற்றுள்ளது. இதை, ஏலத்தின் தொடக்கத்தில் ஐபிஎல் தலைவா் பிரிஜேஷ் படேல் அறிவித்தாா்.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே ராணுவ ரீதியிலான பதற்றநிலை ஏற்பட்டதை அடுத்து, சீன நிறுவனங்கள், அவற்றின் பொருள்களுக்கு எதிராக இந்தியாவில் எதிா்ப்பலை எழுந்தது. அதன் எதிரொலியாக ஐபிஎல் போட்டியின் 13-ஆவது சீசனுக்கான பிரதான விளம்பரதாரா் அந்தஸ்திலிருந்து சீன நிறுவனமான விவோ விலக்கப்பட்டு, ஆன்லைன் விளையாட்டு தளமான ‘டிரீம் 11’ இடம் அந்த ஸ்பான்சா்ஷிப் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் அந்த அந்தஸ்தை விவோ நிறுவனமே பெற்றுள்ளது. முன்னதாக ஐபிஎல் பிரதான விளம்பரதாரா் அந்தஸ்தை விவோ நிறுவனம் 2017 முதல் 2022 காலகட்டத்துக்காக ரூ.2,477 கோடி கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT