முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர்: ரோஹித் சர்மா சாதனை

வேறு எந்த வீரரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 சிக்ஸர்கள் கூட அடித்ததில்லை...

செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர்: ரோஹித் சர்மா சாதனை

வேறு எந்த வீரரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 சிக்ஸர்கள் கூட அடித்ததில்லை...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்துள்ளது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார். லபுசான் 91 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

இந்திய அணியின் இன்னிங்ஸில், 22 ரன்கள் எடுத்திருந்தபோது சுழற்பந்து வீச்சாளர் லயன் பந்தில் சிக்ஸர் அடித்தார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு வேறு எந்த வீரரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 சிக்ஸர்கள் கூட அடித்ததில்லை. 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்

100 - ரோஹித் சர்மா*
63 - இயன் மார்கன் 
61 - மெக்குல்லம்
60 - சச்சின் டெண்டுல்கர்
60 - எம்.எஸ். தோனி

முழு கட்டுரையைப் படிக்க →