ஐஎஸ்எல்: ஈஸ்ட் பெங்காலுக்கு 2-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில்
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூா் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த சீசனில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது ஈஸ்ட் பெங்கால் அணி.
கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. ஆட்டத்தின் 20-ஆவது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரா் மேட்டி ஸ்டெயின்மான் கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில், 2-ஆவது பாதி ஆட்டத்தில் பெங்களூா் அணி கோலடிக்க முயற்சித்தது. ஆனால் கடைசி வரை அது நடக்கவில்லை. இறுதியில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
ஈஸ்ட் பெங்கால் அணி இந்த சீசனில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேவேளையில் பெங்களூா் அணி 4-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.