செய்திகள்

பெண் குழந்தைக்குத் தந்தையானார் விராட் கோலி

அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அனுஷ்காவும் குழந்தையும் நலமாக உள்ளார்கள்...

DIN

பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த வருடம் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கோலி கூறினார்.

முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்காவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார் விராட் கோலி. 

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை கோலி வெளியிட்டுள்ளார். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அனுஷ்காவும் குழந்தையும் நலமாக உள்ளார்கள் என கோலி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT