செய்திகள்

ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை ஸ்டீவ் ஸ்மித் மாற்றினாரா?: ஆஸி. கேப்டன் விளக்கம்

DIN


ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை ஸ்டீவ் ஸ்மித் மாற்ற முயற்சி செய்யவில்லை என ஆஸி. கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

சிட்னி டெஸ்டில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது ஸ்மித் செய்த ஒரு காரியம் அவர் மீது விமர்சனங்களை வரவழைத்துள்ளது. பேட்டிங் கிரீஸில் ரிஷப் பந்த் இல்லாதபோது அங்கு வந்த ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை மாற்ற முயற்சி செய்தார். பேட்டிங் கார்ட் என்கிற கிரீஸில் வைக்கப்படும் சரியான அடையாளத்தைக் கொண்டே பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சை எதிர்கொள்வார்கள். மூன்று ஸ்டம்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதை பேட்டிங் கார்டாக வைத்துக்கொள்வார்கள். ஆனால், ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை அழித்து வேறொரு பேட்டிங் கார்டை ஸ்மித் அமைத்தது போல அவருடைய செயல் இருந்தது. இக்காட்சி ஸ்டம்ப் கேமராவில் பதிவானது.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ஸ்மித்தின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். முன்னாள் வீரர்கள் சேவாக், ஆகாஷ் சோப்ரா போன்றோர் இதை விமர்சித்துள்ளார்கள். 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆஸி. கேப்டன் டிம் பெயின் கூறியதாவது:

இதுபற்றி ஸ்டீவ் ஸ்மித்திடம் பேசினேன். இது வெளியே புரிந்துகொள்ளப்பட்டது குறித்து அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் விளையாடும்போது ஒருநாளைக்கு இதுபோல ஐந்தாறு தடவை செய்வார். பேட்டிங் கிரீஸில் எப்போதும் நின்றுகொண்டு காற்றில் பேட்டிங் ஷாட்டை விளையாட முயற்சி செய்வார். அப்போது கிரீஸில் தனக்கான பேட்டிங் கார்டை உருவாக்குவார். 

அவர் பேட்டிங் கார்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. நான் அவருடன் விளையாடியபோது டெஸ்ட், ஷீல்ட் ஆட்டங்களில் இதுபோல செய்து பார்த்துள்ளேன். அவர் ஆடுகளத்தில் இருக்கும்போது பேட்டிங் கிரீஸுக்குச் சென்று, தான் எப்படி விளையாடுவேன் எனப் பயிற்சி செய்து பார்ப்பார். நேற்று, பேட்டிங் கிரீஸின் அருகே சென்று இடது கை பேட்ஸ்மேன் எப்படி விளையாடுவார், லயன் எங்குப் பந்து வீச வேண்டும் என்று பார்த்தார். 

மற்றபடி, நிச்சயமாக ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை மாற்ற நிச்சயம் முயற்சி செய்யவில்லை. அவர் அதுபோல எப்போதும் செய்வது தான் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT