செய்திகள்

சையத் முஷ்டாக் அலி டி20: தினேஷ் கார்த்திக், ஜெகதீசன் அதிரடியால் ஹைதராபாத்தை வீழ்த்திய தமிழக அணி

ஜெகதீசன் 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 78 ரன்களும்...

DIN

தினேஷ் கார்த்திக், ஜெகதீசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளது தமிழக அணி.

கொல்கத்தாவில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தானே தியாகராஜன் 6 பந்துகளில் 16 ரன்களும் மிலிந்த் 11 பந்துகளில் 24 ரன்களும் எடுத்து கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடந்த இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றியை அடைந்தது தமிழக அணி. தொடக்க வீரர் ஜெகதீசன் 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 78 ரன்களும் தினேஷ் கார்த்திக் 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தமிழக அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயங்களுடன் முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழப்பு

இரும்புக் குழாய் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்த பாம்பு

முதல்வா் கோப்பையை வென்ற பாா்வைத்திறன் குறையுடைய மாணவிகளுக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT