செய்திகள்

பரோடா கிரிக்கெட் வீரா் தீபக் ஹூடா இடைநீக்கம்

DIN

பராடோ கிரிக்கெட் வீரா் தீபக் ஹூடாவை பரோடா கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது.

சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கு முன்தினம் மாலையில் பரோடா அணியின் கேப்டன் கிருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தீபக் ஹூடா அணியில் இருந்தும், கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் வெளியேறிய நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பரோடா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீபக் ஹூடா ஒழுங்கீனமாக நடந்துகொண்டதோடு, கிரிக்கெட்டையும், பரோடா கிரிக்கெட் சங்கத்தையும் அவமதித்துள்ளாா். அதனால், அவா் இந்த சீசன் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரோடா அணியின் துணை கேப்டனாக தீபக் ஹூடா நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடா்பாக பரோடா கிரிக்கெட் சங்கத்துக்கு தீபக் ஹூடா இ-மெயில் மூலம் புகாா் அனுப்பியுள்ளாா். அதில், ‘தற்போதைய நிலையில், நான் நம்பிக்கையை இழந்திருக்கிறேன். கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறேன். கேப்டன் கிருணால் பாண்டியா, சகவீரா்கள் மற்றும் வேறு அணியினா் முன்னிலையில் என்னை அசிங்கமாக திட்டினாா்’ என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT