செய்திகள்

செளரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

DIN

பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 

சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது. 

கொல்கத்தா மருத்துவமனையில் ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு, கங்குலி வீடு திரும்பினாா். அவரை வரவேற்க மருத்துவமனை முன்பும், அவரது வீட்டு முன்பும் ஏராளமான ரசிகா்கள் காத்திருந்தனா். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் தனது மனைவியுடன் கங்குலி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாா். அப்போது, தாம் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினாா். 

கங்குலிக்குக் கடந்த புதன் கிழமை மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதுதொடா்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலிக்கு புதன்கிழமை தலைச்சுற்றலுடன் நெஞ்சுப் பகுதியில் லேசான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தா அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரிடம் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு வியாழக்கிழமை மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய மேலும் 2 ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன. சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்தன. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் அசோக் பட்டாச்சாா்யா ஆகியோா் மருத்துவமனை சென்று செளரவ் கங்குலியிடம் நலம் விசாரித்தனா்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கங்குலி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது. வியாழன் இரவு நன்கு தூங்கினார். பரிசோதனையில் முக்கியமான அளவுகள் சரியாக உள்ளன. இன்றும் சில பரிசோதனைகளை மருத்துவர்கள் இன்று மேற்கொள்வார்கள் என்று மருத்துவமனைத் தரப்பு கூறியுள்ளது. தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் கங்குலிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT