செய்திகள்

விம்பிள்டன்: சானியா மிர்சா ஜோடி வெற்றி, போபண்ணா ஜோடி தோல்வி

விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்று...

DIN

விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள். 

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதானி மாடெக் சாண்ட்ஸ் ஜோடி, சிலியின் அலெக்ஸா - அமெரிக்காவின் டெசிரே ஜோடியை எதிர்கொண்டது. இதில் 7-5, 6-3 என நேர் செட்களில் வென்று சானியா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. சானியா மிர்சா, 2015-ல் விம்பிள்டனில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார். ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார். 

எனினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி தோல்வியடைந்தது. முதல் சுற்றில் ஃபின்லாந்தின் ஹென்றி கொன்டினன் - ஃபிரான்ஸின் ரோஜர் வேஸலின் ஜோடி, இந்திய ஜோடியை 6-7, 4-6 என நேர் செட்களில் தோற்கடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT