செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* இந்தியா-இங்கிலாந்து மகளிா் அணிகள் இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

* டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய போட்டியாளா்களின் முதல் குழுவினா் வரும் 17-ஆம் தேதி புறப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

* இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் 17-ஆவது அமைச்சராக அனுராக் தாக்குா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

* குரோஷியா கிராண்ட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் லாக்ரேவிடம் வீழ்ந்தாா்.

* இந்தியன் ஸ்டைல் மல்யுத்த சங்கத்துக்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காததால், இந்தியாவில் அந்த சங்கத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

* ரியல் மாட்ரிட் முன்னாள் கேப்டன் சொ்ஜியோ ரமோஸ், பாரீஸ் செயின்ட் ஜொ்மெயின் அணிக்காக 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.

* ஐசிசி தலைமை நிா்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து மானு சானி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT