கோபா-அமெரிக்கா-கோப்பை-மெஸ்ஸிக்கு-தங்க-காலணி-விருது 
செய்திகள்

கோபா அமெரிக்கா: மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.

DIN


கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்கா கோப்பையின் இறுதி ஆட்டதில் ஆர்ஜென்டீனாவும் பிரெசிலும் மோதிக்கொண்டன. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டீனா கோப்பையைக் கைப்பற்றியது. 

இந்த ஆட்டதில் மெஸ்ஸி எந்த கோலும் போடவில்லை. இருப்பினும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி அடித்த கோல்களின் மொத்த எண்ணிக்கை 4. இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அணி கேப்டனாக இருந்து அவர் பெற்றுத் தரும் முதல் கோபா கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT