முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக்: ஐஓசி

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேன் நகரைத் தேர்வு செய்துள்ளது.

செய்திகள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக்: ஐஓசி

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேன் நகரைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேன் நகரைத் தேர்வு செய்துள்ளது.

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த ஐஓசி நிர்வாகக் குழு கடந்த ஜூனில் முன்மொழிந்தது. டோக்கியோவில் நடைபெறும் ஐஓசி 138-வது அமர்வில் இதுதொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐஓசியின் 138-வது அமர்வு டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்றது. ஐஓசி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதற்கான வாக்கெடுப்பு முடிவுகளை ஐஓசி வெளியிட்டுள்ளது. அதன்படி, 80 வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 77 வாக்குகள் பதிவாகின. 3-இல் வாக்குகள் பதிவாகவில்லை. இதனால், 39 வாக்குகள் பெரும்பான்மையாகக் கருதப்பட்ட நிலையில், 2032 ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த 72 பேர் 'ஆம்' என்று வாக்களித்துள்ளனர். 5 பேர் மட்டுமே 'இல்லை' என்று பதிலளித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →