கோப்புப்படம் 
செய்திகள்

ருதுராஜ், படிக்கல்லுக்கு வாய்ப்பு: 2-வது டி20யில் இந்தியா முதல் பேட்டிங்

​இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

DIN


இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்தது. ஆனால், இந்திய வீரர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாண்டியாவுடன் தொடர்பிலிருந்ததன் காரணமாக இந்திய வீரர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இந்திய அணியில் 4 அறிமுக வீரர்கள் களமிறங்குகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

அகமதாபாத் டெஸ்ட்: சிராஜ் பந்துவீச்சினால் தடுமாறும் மே.இ.தீ.!

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

பெளர்ணமி: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்!

SCROLL FOR NEXT