செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: நடப்பு சாம்பியன் கரோலினா மரின் விலகல்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸிலிருந்து நடப்பு சாம்பியன் கரோலினா மரின், காயம் காரணமாக விலகியுள்ளார்.

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸிலிருந்து நடப்பு சாம்பியன் கரோலினா மரின், காயம் காரணமாக விலகியுள்ளார்.

2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரின் 19-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார். சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருவதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான பயிற்சியின்போது கரோலினா மரினுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அக்காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கரோலினா மரின் இன்று தெரிவித்துள்ளார். 

இந்த வாரம் அறுவை சிகிச்சை நடைபெறும். கடந்த இரு மாதங்களாக சிறப்பான முறையில் பயிற்சியெடுத்து வந்தேன். ஒலிம்பிக்ஸ் போட்டியில் நல்ல முறையில் கலந்துகொள்வேன் என நினைத்தேன். இப்போது வாய்ப்பில்லை என கரோலினா மரின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT