செய்திகள்

லார்ட்ஸில் சதமடித்த அறிமுக வீரர்: முதல் நாளில் நியூசிலாந்து 246/3 (ஹைலைட்ஸ் விடியோ)

DIN

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேசி, ஒலி ராபின்சன் மற்றும் நியூசிலாந்து அணியில் டேவோன் கான்வே என மூன்று வீரர்கள் இந்த டெஸ்டில் அறிமுகமாகியுள்ளார்கள். இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் நியூசிலாந்து அணி இரு ஆல்ரவுண்டர்களுடனும் களமிறங்கியுள்ளன. இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமை தாங்குகிறார்கள்.

தனது 161-வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், அதிக டெஸ்டுகளில் விளையாடிய இங்கிலாந்து வீரரான குக்கின் சாதனையைச் சமன் செய்துள்ளார். 

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி, 86 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. அறிமுக வீரர் கான்வே 136 ரன்களுடனும் ஹென்றி நிகோல்ஸ் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT