இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பிரிஸ்டோல் நகரில் கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 81.2 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. ஷஃபாலி வர்மா 96 ரன்களும் மந்தனா 78 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணியில் சோஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. ஷஃபாலி வர்மா 55, தீப்தி சர்மா 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றைய ஆட்டத்தில் ஷஃபாலி வர்மா, 83 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் அடித்தார் ஷஃபாலி.
முதல் டெஸ்டில் 3 சிக்ஸர்களை அடித்த ஷஃபாலி வர்மா, மகளிர் கிரிக்கெட்டில் ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் ஒரு டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்த இளம் வீரர் என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.