செய்திகள்

மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக டேரன் சமி தேர்வு

மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

37 வயது சமி, மே.இ, தீவுகள் அணிக்காக 38 டெஸ்டுகள், 126 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2017-ல் விளையாடினார். அவர் தலைமையில் டி20 உலகக் கோப்பையை 2012, 2016 என இருமுறை மே.இ. தீவுகள் அணி வென்றுள்ளது. 

இந்நிலையில் மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அல்லாத இயக்குநராக டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைப் போல மேலும் இருவர் இயக்குநர்களாகத் தேர்வாகியுள்ளார். 

மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ரிக்கி இதுபற்றி கூறியதாவது:

வாரியத்தின் முடிவுகளில் டேரன் சமியின் யோசனைகள் மிகவும் உதவியாக இருக்கும். சரியான கேள்விகளை சமி எழுப்ப வேண்டும். எங்களுக்கு நல்ல யோசனைகளையும் தீர்வுகளையும் அவர் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெறி மறுவெளியீடு ஒத்திவைப்பு!

டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி! 10 நிமிட சேவையை ரத்து செய்யும் பிளிங்கிட்

கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்த குழப்பமும் அழுத்தமும் இல்லை: அமமுக

அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும்; தனியார்மயம் கூடாது : ராகுல் காந்தி

சூர்யா எனக்குத் துணையாக நிற்கிறார்: ஞானவேல் ராஜா

SCROLL FOR NEXT