மிதாலி ராஜ் 
செய்திகள்

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய மகளிர் அணி: ஹைலைட்ஸ் விடியோ

இந்திய மகளிருக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

DIN

இந்திய மகளிருக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

பிரிஸ்டாலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய இங்கிலாந்து 34.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் டேமி பியூமௌன்ட் ஆட்டநாயகி ஆனாா். இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து இன்னிங்ஸில் டேமி பியூமௌன்ட் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 87, நேட் ஸ்கீவா் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 74 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். 

இந்த ஆட்டத்தின் மூலம் சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக களம் கண்டாா் இந்திய வீராங்கனை ஷஃபாலி வா்மா. அவா், அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் இந்திய அணியில் இடம்பிடித்த இளம் பிளேயா் (17 ஆண்டுகள் 150 நாள்கள்) என்ற சாதனையைப் படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT