செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: 0-2லிருந்து 2-2 ஆக மாற்றிய கேப்டன் ஃபிஞ்ச்!

DIN

கேப்டன் ஃபிஞ்ச் மீண்டும் அபாரமாக விளையாடி நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற பெரிதும் உதவியுள்ளார். இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 2-2 எனத் தற்போது சமனில் உள்ளது.

வெலிங்டனில் நடைபெற்ற 4-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஃபிஞ்ச், 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டும் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கைல் ஜேமிசன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும் அகர், ஸாம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்த வெற்றியினால் டி20 தொடரை 2-2 என சமன் செய்துள்ளது ஆஸ்திரேலியா. கடைசி டி20 ஆட்டம் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT