செய்திகள்

முதல் டெஸ்ட்: மே.இ. தீவுகள் அணியின் சரிவைத் தடுத்தி நிறுத்திய ஜோஷுவா & கார்ன்வால்!

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.

ஆன்டிகுவாவில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹோல்டர் மற்றும் கெமர் ரோச் ஆகிய இருவரும் அபாரமாகப் பந்துவீசி இலங்கை அணியை 169 ரன்களுக்குள் சுருட்டினார்கள். லஹிரு திரிமனே அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் 5 விக்கெட்டுகளும் ரோச் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, முதல் நாள் முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்தது.  கேப்டன் பிராத்வெயிட் 3 ரன்கள் மற்றும் ஜான் கேம்பெல் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

2-ம் நாளன்று இலங்கை அணி அற்புதமாகப் பந்துவீசியது. இதனால் மே.இ. தீவுகள் அணி 171 ரன்களுக்குள் முதல் 7 விக்கெட்டுகளை இழந்தது. சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜோஷுவா டா சில்வாவும் ரகீம் கார்ன்வாலும் அற்புதமாக விளையாடி சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தார்கள். 2-ம் நாளின் கடைசிக்கட்டத்தில் டா சில்வா, 46 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

2-ம் நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 101 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. கார்ன்வால் 60 ரன்கள், ரோச் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT