திரிமானே 
செய்திகள்

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்த ஒஷாடா - திரிமானே ஜோடி!

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆன்டிகுவாவில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹோல்டர் மற்றும் கெமர் ரோச் ஆகிய இருவரும் அபாரமாகப் பந்துவீசி இலங்கை அணியை 169 ரன்களுக்குள் சுருட்டினார்கள். லஹிரு திரிமனே அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் 5 விக்கெட்டுகளும் ரோச் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 2-ம் நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 101 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. கார்ன்வால் 60 ரன்கள், ரோச் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

3-ம் நாளில் மே.இ. தீவுகள் அணி, 103 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

முதல் இன்னிங்ஸில் 102 ரன்களுக்குப் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர் திரிமானே 76 ரன்களும் ஒஷாடா பெர்னாண்டோ 91 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.

3-ம் நாள் முடிவில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்ஜெயா டி சில்வா 46 ரன்களும் நிசன்கா 21 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். இலங்கை அணிக்கு 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த டெஸ்டின் கடைசி இரு நாள்கள் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சிறையிலிருந்து வந்து வாக்களித்த எம்பி ரஷீத்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

ராதாகிருஷ்ணன் வெற்றி பெறச் சொந்த ஊரில் சிறப்புப் பிரார்த்தனை!

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

SCROLL FOR NEXT