செய்திகள்

தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று தொடங்கியது. 

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று தொடங்கியது. 

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்ஸ் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆக. 24 முதல் செப். 5 வரையும் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று தொடங்கியது. ஜப்பான் முழுவதும் ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படுகிறது. புகுஷிமாவில் தொடங்கிய தீப ஓட்டம், ஜப்பானின் முக்கியமான 47 இடங்கள் வழியே 121 நாள் பயணித்து டோக்கியோ வந்தடையும். இந்த 121 நாள் ஓட்டத்தில் 10,000 போ் பங்கேற்று ஜோதியை ஏந்தவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT