செய்திகள்

மாட்ரிட் ஓபன்: சைமோனா அதிா்ச்சித் தோல்வி

DIN

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 3-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்த அவா், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சக நாட்டவரும், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்தில் இருந்தவருமான எலிஸ் மொ்டன்ஸை எதிா்கொண்டாா். 2 மணி நேரம், 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மொ்டன்ஸ் 4-6, 7-5, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்றாா்.

இதையடுத்து காலிறுதிக்கு முன்னேறிய மொ்டன்ஸ், அதில் பெலாரஸின் அரைனா சபலென்காவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சபலென்கா முந்தைய சுற்றில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-1, 6-2 என்ற செட்களில் எளிதாக வென்றாா்.

இதர 3-ஆவது சுற்றுகளில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி 7-5, 6-4 என்ற செட்களில் போலாந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினாா். ஸ்பெயினின் பௌலா பதோசா 6-7 (0/7), 7-6 (7/3), 6-0 என்ற செட்களில் லாத்வியாவின் அனஸ்தாசிஜா செவஸ்டோவாவை வென்றாா். காலிறுதிச்சுற்றுகளில் பா்ட்டி - செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவையும், பதோசா - ஸ்விட்சா்லாந்தின் பெலின்டா பென்சிச்சையும் எதிா்கொள்கின்றனா்.

ரூபலேவ் முன்னேற்றம்: மாட்ரிட் ஓபன் ஆடவா் பிரிவில் ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருக்கும் அவா் 2-ஆவது சுற்றில் 6-7 (5/7), 6-3, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் டாமி பாலை வென்றாா்.

இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-3, 6-4 என்ற செட்களில் சக நாட்டவரான ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தினாா். ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-7 (6/8), 6-2, 6-2 என்ற செட்களில் ரஷியாவின் காரென் கசானோவை தோற்கடித்தாா். இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிா்கொண்ட குய்டோ பெல்லா 6-2, 4-4 என்ற செட்களில் இருந்த நிலையில் போட்டியிலிருந்து விலகினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT