'நியூசி.க்கு ஏற்ப சூழல் இருக்கும்': உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து கம்மின்ஸ் கருத்து
இங்கிலாந்தில் நிலவும் சூழல் நியூசிலாந்துக்கு ஏற்ப இருக்கும் என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நிலவும் சூழல் நியூசிலாந்துக்கு ஏற்ப இருக்கும் என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18-ம் தேதி சௌதாம்ப்டனில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, யூ-ட்யூபில் ரசிகர்களிடம் கம்மின்ஸ் கூறியது:
"இரண்டு அணிகளும் கடந்த 2 மாதங்களில் எவ்வித டெஸ்ட் ஆட்டங்களிலும் விளையாடவில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஆனால், இங்கிலாந்தில் நிலவும் சூழல் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்துக்கு ஏற்ப இருக்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறை எனக்குப் பிடித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக அது மேலும் கடினமானது. இருந்தாலும் இது சிறந்த நடைமுறை. ஒவ்வொரு டெஸ்ட் தொடரும், வெறும் டெஸ்ட் தொடருக்காக அல்லாமல் அதையும் தாண்டி அதில் ஒரு நோக்கம் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்றார் அவர்.