டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு: பிராவோ அறிவிப்பு 
செய்திகள்

டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு: பிராவோ அறிவிப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ அறிவித்திருக்கிறார்.

DIN

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ அறிவித்திருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான  டுவைன் பிராவோ சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை நடந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையுடன் தோற்றதால் தொடரிலிருந்து வெளியேறியதும் டுவைன் பிராவோ இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் , ‘ நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். நிறைய ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்தாலும் எனது விளையாட்டு வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் அணியில் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

பிராவோ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 85 டி20 போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ரன்களையும் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ரன்களும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ரன்களும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT