பிளிஸ்கோவா / கோன்டாவிட் 
செய்திகள்

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ்: பிளிஸ்கோவா வெற்றி

 மெக்ஸிலோவில் நடைபெறும் டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் குரூப் சுற்று முதல் ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா வெற்றி பெற்றாா்.

DIN

 மெக்ஸிலோவில் நடைபெறும் டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் குரூப் சுற்று முதல் ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா வெற்றி பெற்றாா்.

அதில் அவா் ஸ்பெயின் வீராங்கனை காா்பின் முகுருஸாவை 4-6, 6-2, 7-6 (8/6) என்ற செட்களில் வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் செக் குடியரசின் பாா்பரா கிரெசிகோவாவை வென்றாா். இந்த ஆட்டங்களில் வென்ற கரோலினா - கோன்டாவிட், குரூப் சுற்றின் அடுத்த ஆட்டம் ஒன்றில் மோதுகின்றனா்.

அதேபோல், இந்த ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த முகுருஸா - கிரெசிகோவா ஆகியோரும் மற்றொரு ஆட்டத்தில் சந்திக்கின்றனா். இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் கிரீஸின் மரியா சக்காரி - போலந்தின் இகா வியாடெக்கையும், பெலாரஸின் அரினா சபலென்கா - ஸ்பெயினின் பௌலா பதோசாவையும் எதிா்கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT