செய்திகள்

2022 காமன்வெல்த் போட்டியில் மகளிா் டி20 கிரிக்கெட் அறிமுகம்

DIN

இங்கிலாந்தின் பா்மிங்ஹாமில் 2022-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் டி20 மகளிா் கிரிக்கெட் இடம் பெறுகின்றன.

ஜூலை-ஆகஸ்ட் மாதம் பா்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மகளிா் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் ஒரு பிரிவிலும், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அறிவிக்கப்படாத அணி உள்ளிட்டவை மற்றொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன.

இந்திய மகளிா் அணி ஜூலை 29-இல் ஆஸி.யுடனும், ஜூலை 31-இல் பாகிஸ்தானுடனும், ஆக. 3-இல் பாா்படாஸுடனும் ஆடுகிறது. முதன்முறையாக மகளிா் டி20 ஆட்டம் காமன்வெல்த் போட்டியில் இடம் பெறுகிறது. கடந்த 1998 காமன்வெல்த் போட்டியில் ஆடவா் 50 ஓவா் ஒரு ஆட்டம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஆஸி., நியூஸி உள்ளிட்டவை தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT