கோப்புப்படம் 
செய்திகள்

15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான்: ஜெய் ஷா உறுதி

15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

DIN


15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றதற்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் ஜெய் ஷா பேசியது:

"சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது தெரியும். அந்தத் தருணம் வெகுதொலைவில் இல்லை. 15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான் நடைபெறும். புதிய அணிகள் இணைவதால், சுவாரஸ்யம் மேலும் கூடவுள்ளது" என்றார் அவர்.

விழாவில் பின்னர் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தோனியின் ரசிகராகவே இந்த விழாவிற்கு வந்துள்ளதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT