முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல்: மோகன் பகான் வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி ஈஸ்ட் பெங்காலை வென்றது.

Updated On : 28 நவம்பர் 2021, 5:59 am IST
பகிர்:

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி ஈஸ்ட் பெங்காலை வென்றது.

கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் அணிக்காக ராய் கிருஷ்ணா 12-ஆவது நிமிஷத்திலும், மன்வீா் சிங் 14-ஆவது நிமிஷத்திலும், லிஸ்டன் கோலாகோ 23-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். கடுமையாக முயற்சித்தும் ஈஸ்ட் பெங்கால் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் போனது.

பாம்போலிம் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 11-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments