செய்திகள்

விபத்தில் காயமடைந்த ஷேன் வார்னே

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சை  எடுத்துக்கொண்டார். 

DIN

ஆஸி. அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, விபத்தில் காயமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டுகளில் விளையாடிய 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷேன் வார்னே. 

இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தனக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக 52 வயது ஷேன் வார்னே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தன் மகன் ஜாக்சனுடன் இரு சக்கர வாகனத்தில் நேற்று சென்றபோது, வாகனத்திலிருந்து கீழே விழுந்து 15 மீட்டர் தூரத்துக்குச் சறுக்கிச் சென்றதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். காயத்தினால் வலி அதிகமாக ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சை  எடுத்துக்கொண்டார். 

ஷேன் வார்னே, காயத்திலிருந்து விரைவில் மீண்டு வந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT