இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்குர், காதலி மிதாலியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
இந்திய அணிக்காக 4 டெஸ்டுகள், 15 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ஷர்துல் தாக்குர். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய காதலி மிதாலியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் ஷர்துல் தாக்குர். இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
2022 டி20 உலகக் கோப்பை முடிவடைந்த பிறகு ஷர்துல் தாக்குருக்குத் திருமணம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.