செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி விளையாடும் பயிற்சி ஆட்டங்கள் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன்...

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோதுகிறது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றில் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.  

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 18 அன்று இங்கிலாந்தையும் அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியாவையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் (இந்திய நேரம்) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மாலை 3.30 மணிக்கும் தொடங்கவுள்ளன. இந்திய அணி விளையாடும் பயிற்சி ஆட்டங்கள் ஸ்டார் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT