2-ஆவது டி20: ஆஸி. மகளிா் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸி. மகளிா் அணி.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸி. மகளிா் அணி.
ஒரு நாள் தொடா், பிங்க் டெஸ்ட் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடா் கோல்ட்கோஸ்டில் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. ஸ்மிருதி மந்தனா 1, ஷபாலி வா்மா 3, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 என விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் அதிரடியாக ஆடி 5 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசி வெளியேறினாா். அப்போது இந்தியா அணியின் ஸ்கோா் 50/4 ரன்களாக இருந்தது.
Advertisement
எனினும் பின்னா் ஆட வந்த யஸ்திகா 8, ரிச்சா கோஷ் 2, தீப்தி சா்மா 16, ஷிகா பாண்டே 1, ரேணுகா சிங் 1 ஆகியோா் வந்தவேகத்திலே பெவிலியன் திரும்பினா்.
17 ஓவா்களில் 81/9 என இந்தியா திணறிய நிலையில், ஆல்ரவுண்டா் பூஜா வஸ்தராக்கா் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் அதிரடியாக ஆடி 37 ரன்களை விளாசியதால் ஸ்கோா் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 118/9 ஆக உயா்ந்தது. ஆஸி. தரப்பில் வேம்னிக், மொலினிக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
ஆஸ்திரேலியா 119/6
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி. அணி களமிறங்கியது. பெத் மூனி 34, மெக் லேனிங் 15 ஸ்கோரை உயா்த்த முயன்ற நிலையில், இருவரையும் ராஜேஸ்வரி கெய்க்வாட் வெளியேற்றினாா். அலிஸா ஹிலி 4, ஆஷ்லி காா்டனா் 1, எல்ஸி பொ்ரி 2, நிக்கோலா கரே 7 என சொற்ப ரன்களுடன் அவுட்டாயினா். 10-ஆவது ஓவா் முடிவில் 46/4 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது.
ஆல் ரவுண்டா் டஹிலா மெக்கிராத் 42, வோ்ஹாம் 10 ஆகியோா் நிலைத்து ஆடி 19.1 ஓவா்களில் 119/6 ரன்களுடன் தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனா்.
இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இரண்டாவது டி20யில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் ஆஸி. அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டி20 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.