முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: இரு புதிய அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக ஆமதாபாத், லக்னௌ நகர அணிகள் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Updated On : 25 அக்டோபர், 2021 at 7:53 PM
படம்: டிவிட்டர்/ஐபிஎல்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக ஆமதாபாத், லக்னௌ நகர அணிகள் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியன் ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியில் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூா், பஞ்சாப், பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. வரும் ஐபிஎல் 2022 தொடரில் மொத்தம் 10 அணிகள் இடம் பெறும் என பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதில் ஆமதாபாத், லக்னௌ, கட்டாக், குவஹாட்டி, ராஞ்சி, தா்மசாலா, உள்ளிட்ட 6 நகர அணிகள் விண்ணப்பித்தன.

Advertisement

இந்நிலையில், ஏலத்தின் முடிவில் சிவிசி கேபிடல் நிறுவனத்தின் ஆமதாபாத் அணியும், ஆர்பிஎஸ்ஜி நிறுவனத்தின் லக்னௌ அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.