செய்திகள்

விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே மோதலா?: ரவி சாஸ்திரி பதில்

நீங்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை...

DIN

விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி பேசியதாவது:

விராட் கோலி - ரோஹித் சர்மா இடையிலான மோதலை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. என்னிடம் பலரும் இதைப் பற்றி கேட்டபோது, நீங்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை என்றேன். இருவரிடமும் எப்போதும் ஒற்றுமை இருக்கும். இருவரிடமும் மோதல் இருந்தால் அதனால் இந்திய அணி பாதிப்படையவில்லை. அதனால் அணிக்குள் பாதிப்பு ஏற்பட்டால், இருவர் முகத்தின் முன்பு நேரடியாகச் சொல்லிவிடுவேன், இது சரியல்ல, நீங்கள் வேறுவிதமாக இதைக் கையாள வேண்டும் என்று. ஆனால் இருவரால் அணியில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எனக்கு என்ன தேவையோ அதைச் சொல்லும் மனிதன் நான் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் கனட வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

புதுப்பூங் கொன்றை... பாயல் ராதாகிருஷ்ணா!

ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு: இஸ்ரேல் ராணுவம்

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

தீபாவளி பார்ட்டி... சாயிஷா!

SCROLL FOR NEXT